Tuesday, July 28, 2009

தன்னில் தானே ஒளிரும் கலை

கலை என்றும் அழகு என்றும் குழந்தையும் இன்று பேசுகிறது. இந்தப் பேச்சிற் குழப்பம் உண்டே அன்றித் தெளிவு இல்லை. வரையறை செய்து எதற்கும் இலக்கணங் கூற வேண்டும் என்பர் முன்னோர். ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் இவ்வுலகில் ஒன்றன் எல்லையை ஒருவாறு தெளிய வேண்டும் என்று விஞ்ஞானம் வற்புறுத்தும். நீர் ஆவியாக மாறும் எல்லை 2120. நீர் கட்டியாக இறுகும் எல்லை 320. இப்படிக் கூறுவதே விஞ்ஞானம்.அதே போல கலை அழகு என்பவற்றின் எல்லையையுங் காண வேண்டும்.

எல்லை இல்லாதது.கலை அல்;லது கலைப் பொருளின் ஆழம் முடிவில்லாதது; எல்லை இல்லாதது; ஆனால் தன் உள்ளத்தே கண்ட காட்சியைக் கலைஞன் பலமுறையிற் பலபல செய்திறன்படியே பலபல வழியில் முயன்று எல்லோரும் கண்டு துய்க்குமாறு செய்துவிடுகின்றான். அவன் செயற்பாடுகள், கலையின் வழிகள், இப்படி ஒரு முடிவுநிலையை, முற்றுநிலையை எய்துகின்றன. அங்;கும் பழுப்பதே அழகு. அதுவே அங்கு ஒளிரும் வெற்றியின் அடையாளம். ஆறெல்லாம் கடலிற் பாய்கின்றன. ஆற்றின் ஓட்டமெல்;லாம் முடிகின்ற இடமே கடல். ஆனால் கடலா ஆறு? கலையின் முடிவிடம் அழகு; கடலைக் கடைந்தெழும் அமுது அது. ஆனால் கலையன்று அழகு. நியூடன் ஆப்பிள்பழம் விழுவதனைக் கண்டதும் பல நாளாக அவன் ஆழ்ந்தெண்ணிய கணக்கு உண்மையாகக் கண்டான்; அண்டத்தின் இயக்கம் ஒரு பொருள். ஒரு பொருளை இழுக்கும் கவர்ச்சிச் சட்டத்தின் வழியே தௌ;ளத்தெளிய அவனுக்கு விளங்கியது; அவன் ஆராய்ச்சி அவ்வாறு முடிவடைந்தது. துள்ளிக் குதித்தான். துள்ளிக் குதிக்கும்; இன்பநிலை அவன் ஆராய்ச்சியின் எல்லை; ஆனால் அதுவன்று அவன் ஆராய்ச்சி; அவன் ஆராய்ச்சி செவ்வனே முடிந்ததன் அடையாளம் அது.ஒற்றுமை பெறுவது கலைஒரு நொடிப்போது தோன்றும் வானவில்- செவ்வானம் - குறிப்பிட்ட போது தோன்றும் மேகத்தின் வடிவம் - நிறம். குயிலின் பாடல் மயிலின் ஆடல்; - இப்படித் தனித்;தனி அனுபவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொள்கின்;றன. ~~என்ன அழகு என்ன அழகு!! கண் கொள்ளாக் காட்சி~~ என்று கூறுகிறோம். இந்த அனுபவம் கலையாகுமா? முல்லைப் பாட்டாராய்ச்சியின் ஆசிரியர் இவை எல்லாம் பாட்டு என்று கூறுகிறார்- இல்லை பாடுகிறார். ஆனால் இந்தத் தனி அனுபவம் கலையாவது இல்லை. ~அழகு~ என்ற சொல் கலையாகிவிடுவதில்லை. இப்படிப் பல சொற்கள் உணர்ச்சி நிலையங்களாக நம்மை இயக்கும் மந்திரசக்தி பெற்றுள்ளன. இன்பம், அன்பு, காதல், ஒற்றுமை முதலிய சொற்களை மட்டும் கேட்டவுடனே பாட்டென மயங்கலாகாது. ~~புரட்சி ஓங்குக~~, ~~சமத்வம் சகோதரத்வம் சுதந்திரம்~~; என்ற கோசங்கள் உலகினையே புரட்டும் மந்திரங்கள். ஆனால் அவை பாட்டாவதில்லை. தனி அனுபவமோ தனியே நிற்பது; ஒருமையாய்ப் பிரிவது. கலை தனிமையன்று; கூட்டுறவு. ஒருமையன்று ஒற்றுமை. முரணுபவை, முரண்பாடு நீங்க, வேறுபட்டவை ஒற்றுமையமைய நிற்பதே கலை. எல்;லாவற்றையும் பெருக்கிக் கூட்டிய குப்பையன்று கலை. எல்லாம் ஒன்றாய்க் குழைந்து ஒற்றுமை பெறுவதே கலை. பல உறுப்பும் ஒன்றாய் அமைந்த உடலம் உயிர் பெற்று ஒளிர்வது போன்ற ஒற்றுமையின் வெளிப்பாடே கலை. அங்கே கலைஞன் கண்ட காட்சி- அதனை வெளியிடக் கையாண்ட முறை - செய்திறனில் வெற்றி இவையெல்லாம் புலப்படத் தோன்றும்.~~என்ன சிறப்பு? என்ன அழகு?~~என்று கூறும்போது அ.ந்த வெற்றியைப் பாராட்டுகின்றோம். அதனாலேயே அழகு என்பது அந்த வெற்றியின் அடையாளம் -அறிகுறி என்கிறோம். செய்திறன் புலப்படத் தோன்றினாலன்றிக் கலையழகு எனக் கூறப்புகுவோர் இல்லை. ~~அப்பம் எப்படிச் சுட்டாளோ? தித்திப்பு எப்படி நுழைத்தாளோ?~~ என்பது போன்ற ஈடுபாடே அங்குத் தோன்றுகின்றது.

கலைப்பொருளழகு-அக்கலையைப் படைத்த வியப்பு இந்த இரண்டும் வேறொன்று நில்லாது, ஒன்றாய் அங்கே தெளிந்;;து சுவை கொழிக்கின்றன.
தன்னலமின்மைஇங்கே மற்றொன்றும் தோன்றுகிறது. அதுவே கலையின் தன்னலமின்மை. கலையைத்தூண்டுவது. இயக்கி வைப்பது எது? உள்ளெழுச்சியாக ஒங்கியதோர் அனுபவமேயாம். அதுவே உணர்வாய் ஒளிர்கிறது கலை செங்கதிரோன் போலத் தன்னொளியில் தழைப்பது; வெண்கதிரோன் போலப் பிறிதொளியில் பெருமை கொள்வது கலையன்று. இரவல் இல்லை அங்கே; தன்னொளியே உள்ளது. எல்லாம் தன்னொளியாகக் குழைகிறது. தன்னில்;தானே ஒளிர்கிறது. வேறொரு காரணத்தால் கலை மதிப்பு பெறுவதில்லை. பெருஞ்சுட்டு அடைவதில்லை. அதன் மதிப்பே அதன் பெருஞ்சுட்டு. காந்தியடிகள் போல ஒழுக்கத்தால் பெரியோர் ஒழுக்கம் போல காரணமாக மதிப்புப் பெறுவா.; சங்கரர் அறிவில் சிறந்த ஞானியர். அறிவு காரணமாக மதிப்புப் பெறுவர். அரிச்சந்திரனைப் போல உண்மை கூறுவோர் உண்மையால் உயர்வர். சீதை போல நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுவோh,; நல்லதனால் ஒளிர்வர். உண்மை, நன்மை, அறிவு, ஒழுக்கம் இவற்றிற்கு அப்பாற்பட்ட உணர்வே கலை. கலைஞனும் மனிதனே; ஆகையால் வாழ்வாங்கு வாழ்ந்து உண்மை கூறி ஒளிர்வான்; ஒழுக்கத்தால் ஓங்குவான். அதனாற் கலையில் உண்மை ஒளிரும்; ஒழுக்கம் மிளிரும்; ஆனால் அவையெல்லாம் கலைஞானம் மனிதனின் உயர்வேயன்றி அவன் கலையின் சிறப்பு அன்று. கலை ஒழுக்கத்தின் சிறப்பையோ, அறிவின் தெளிவையோ கொண்டு ஒளிர்வதில்லை ; பெருஞ்சுட்டு;ப் பெறுவதில்லை. கலை கலை என்ற நிலையால் மட்டுமே கதிர் விடுகிறது; பெருஞ்சுட்டுப்படுகிறது. மெய் பொய் என்ற வேறுபாடும் அங்கில்லை. அவற்றிற்கும் அப்பாற்பட்ட அனுபவம் அது. கலைஞன் பத்துத் தலை காட்டுவான்; ஆயிரம் கைகளை வீசுவான். மகளிர் முகம் கொண்ட பசு என்பான்.

தன் அனுபவத்தினை விளக்க மூவகையுலகினையும் கடந்து கற்பனை உலகினும், கனவுலகினும் குழவியுலகினும் சென்று ஒப்புமைகண்டு வருகிறான். பிறர் சொல்ல முடிந்ததனைத் தான் சொல்ல முடியாமையால் குழவி கூற முந்துகிறது; அல்லது தன் உணர்ச்சியையே வெளியுலகமாகக் காண்கிறது. பலகையை உடைத்துத் தகப்பன் பிரம்படிக்கு அஞ்சும் குழவி, உடையாத உலகில் பிரம்படி இல்லாமையை உணர்ந்து அந்த ஆசைப் பெருக்காற் பலகையைத் தான் உடைக்கவில்லை என்று உணர்ச்சியுலகிலிருந்து உண்மையே கூறுகிறது. ஆதலால் அங்கும் மெய் பொய் என்ற ஆராய்ச்சி இல்லை. யாரும் சொல்ல முடியாததனைச் சொல்ல முந்துகிறான் கலைஞன்;;;. ஆகையால் தான் கண்ட காட்சியை நம்முளம் கொளக் கூறுகிறானா என்ற ஆராய்ச்சியை விட்டுப் பொய் மெய் என்று அங்கு ஆராய்வது குளிக்கப் போய்ச் சேறு பூசிய கதையாகும். ~~பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்~~ என்பது அறவுலக உண்மைமட்டும் அன்று;. கலையுலக உண்மையுமாகும்.

உளப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதுஉலகில் உலவிவரும் போது பலபல காட்சிகள் நம் உள்ளத்தே படிகின்றன் உளப்பாடாகின்றன. இவை கலையென வெளிப்பாடாகும் போது முன் ஒன்றுபடாதவை எல்லாம் ஒன்றாகின்றன. பலபல கிளையாய் வேறுபிரிந்து வௌ;வேறு புறத்தே சென்று விரிவனவெல்லாம் ஆணிவேரில் ஒன்றாவது போன்ற பொருளாழம் கலையில் தோன்றக் காண்கிறோம். கீழே விழுந்து கிடக்கும் இலையில் இந்தப் பொருள் ஆழம் தோன்றுமா? எனவே கலையின் மதிப்போ பெருஞ்சுட்டோ அவ்வப்போது தோன்றும் இத்தகைய உளப்;பாடுகளுக்கும் அப்பாற்பட்டது. நீரிற் கலந்த உப்பும், கார்ப்பும், புளியும் போலக் கலையில் ஒரு கூட்டுறவுச் சுவை உண்டு. இப் பெருஞ்சுட்டு வேறொன்று கொண்டு விளங்குவதில்லை. வேறோர் அளவுகோல் கொண்டு இதனை அளப்பதற்கில்லை. இதனைக் காசு கொண்டு கடைக்குப்போய் மாற்றி வாங்க முடியாது. அழகையும், சிற்பத்தினையும், பாட்டையும் பணம் கொடுத்து வாங்குகிற உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் இந்த விலை கலைக்கு விலையன்று. கல்லுக்கும,; மண்ணுக்கும் காகிதத்திற்கும் அட்டைக்கும் விலை; வாங்குவோனின் செல்வச் செருக்கிற்கு விலை. கலை என்பது உணர்வு நிலையாக அனுபவமாக நிலைக்கும் போது அதற்கு விலை ஏது! அழகிது என்று கூறும் உணர்வு காண்போனிடம் எழும்; கலையோ காட்சிப் பொருளாம் உணர்வாய்க்காண்போன் உணர்வுக்கும் அப்பாற்பட்டதாய் இரண்டும் வேறொன்று தோன்றாத நிலையில் ஒளிரும் உணர்வாகும். அப்படி அப்பாலுக்கு அப்பாலாம் உணர்வு நிலைப் பெருஞ்சுட்டுத் தான் யாது? இங்கொரு புதிய படைப்பு எழுகிறது. இதனைத் தச்சன் படைப்பிலும் காணவில்லையா? முன்னிருந்த மரந்தான் நாற்காலியிலும் உண்டு? ஆனால் புதிய கோவை-புதிய வடிவம் எழுகிறது.

முன்னிருந்தவை உறுப்புக்களாக அமைய இவற்றிடையே புத்துயிர் தோன்றுகிறது. உறுப்புக்களாக அமைபவை முன்போலத் தத்தமக்கென வாழ்ந்த தனிநிலை இல்லை. தனித்து வாழும் கொடிய விலங்குகளின் வன்கண்மை இல்லை. தத்தம் அழகோடும் அவை அனைத்தும் புதியதொரு முழுநிலையாக ஓங்க அவை ஒவ்வொன்றும் தாம் அழிய மாறியும் அம் முழு நிலைக்காக வாழும் அழகு தோன்றுகிறது. முழுநிலைக்காக வாழாது ஓருறுப்பு நம் உடலில் வாழத்தொடங்கினால் அங்கு புற்றுநோய் உண்டு என்போம். அங்கே நோயிலா நிலை இல்லை; அப்படித்தான் கலைப்பொருளிலும் எனலாம். உயிர்ப்பொருளின் உடலமைப்பு நிலை கலையின் நிலையை சிறிது விளக்கலாம். கலையை உயிர் என்பது இதனாலேயாம். கூட்டுறவு, ஒற்றுமை அன்பு- இப்படிக் கலை தோன்றுகிறது. புளிப்பு, உப்பு, கார்ப்பு, துவர்ப்பு, இனி;ப்பு, கைப்பு என்ற அறுவகைச் சுவையும் எத்தனையோ பல வகையாகச் சேர்ந்து விளங்குவதே உணவுக்கலை; நளன்கலை; வீமன்கலை. இவை வாய் சுவைக்கலை, உண்மைக் கலையோ உணர்வுச் சுவைக் கலை. முரண்பட்டு வெருட்டி மயக்கும் உலகின் உண்மையை நம் உளங்கொளக் காட்டி நம் உள்ளத்தின் உயரத்தினை உள்ளமும் உணர்ந்து ஓங்கச் செய்வதே கலையின் வடிவம். கலையின் வடிவம் ஈதானால் கலையின் பெருஞ்சுட்டு இதனினும் வேறாக எவ்வாறு விளங்குதல்; கூடும்? இதனாலேயே கலை என்பது தன்னிற்றானே விளங்குவது, தன்னினும் வேறான நோக்கம் இல்லது, தன்னலம் அற்றது என்றோம்.

நன்றி ஈழகேசரி வெளியீடு

No comments:

Post a Comment