Monday, May 6, 2013

சமயமும் கட்டடக்கலையும்....அ.சி.உதயகுமார்

1.இந்தியா, இலங்கை என்பவைகளில் கட்டிடக் கலையானது சமயங்களின் அடிப்படையில்தான் மிகப் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், இந்த நாடுகளின் கட்டிடக்கலையினை பின்வருமாறுதான் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியுள்ளது: 1) பௌத்த கட்டிடக்கலை: 2) இஸ்லாமியக் கட்டிடக்கலை; 3) கிறீஸ்தவக் கட்டிடக்கலை 4) நவீனக் கட்டிடக்கலை. 

வேதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் அக்கினி குண்டங்களைத்தான் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களது கட்டிடக்கலையானது வீடுகள் கட்டுவதுடன் நின்றுவிடுகிறது. கோயில்கள் அவர்களுக்கு இருந்ததில்லை! 



பௌத்தக் கட்டிடக்கலை என்பதைப் பொறுத்தமட்டில், தேரவாத பௌத்தமானது புத்தபெருமானையும், பௌத்த போதனையையும் அடையாளப்படுத்துவதையும், புத்தபெருமானை வணங்குவதையும் ஏற்கவில்லை. மஹாயாண பௌத்தம் மாத்திரமே இவற்றை ஏற்றிருந்தது. இந்தநிலையில பௌத்த கட்டிடக்கலை என்றால், அது உண்மையில் ‘மஹாயாண‘ பௌத்தக் கட்டிடக்கலையாகவே இருக்கமுடியும். 


சைவம், வைணவக் கட்டிடக்கலைகள் என்பவை பற்றி ஒருவர் பேச முற்படும் முன்னர், அவர் சிவன், விநாயகன், முருகன், மற்றும் சைவக் கடவுள்களும், விச்ணுவும் உண்மையில் என்ன அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தனர் என்பதை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து அறியவேண்டியுள்ளது.
பௌத்தக் கட்டிடக்கலை ஆனது என்ன அடிப்படையில் உருவாக்கப்பட்டு, விருத்தி செய்யப்பட்டிருக்கமுடியும்?
அது பௌத்த போதனை அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு, விருத்தி செய்யப்பட்டிருக்கமுடியும்.
இந்தநிலையில், மஹாயாண பௌத்தக் கட்டிடக்கலையானது பின்வருவனற்றின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருக்கமுடியும்.

1) பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவமான நடுவுப்பாதை (the Middle Path) (பௌத்த அறம்);
2) நான்கு பெரும் உண்மைகள் (the Four Noble Truths);
3) மும்மணிகள் (the Triple Gem);
4) எண் குணங்களைக் கடைப்பிடிக்கும் மூன்று படிகள் (the Three Steps Siila, Samaadhi, Panna) 
5) the Seven links to Enlightenment;
6) எண் குணங்கள் (the Noble Eight fold Path);
7) the Nine Consciousness;
 the Ten Precepts;
9) பன்னிரண்டு நிதானங்கள் (the twelve Nithanas that determine the birth death cycle);
10) …….


 2. இவற்றுள் எவையெவைகள் கட்டிடக்கலையில் பொருத்தமான முறையிலும், அழகூட்டும் விதத்திலும் பிரயோகிக்கப்படமுடியும் என்பதை ஆராய்ந்தறிந்தே, மஹாயாண பௌத்தர்கள் பௌத்தக் கட்டிடக்கலையை உருவாக்கி, விருத்திசெய்திருக்கமுடியும்.

இவைகளை நாம் ஒவ்வொன்னறாக ஆராய்ந்து முடிவு
களுக்கு வரமுடியும்.
‘நடுவுப்பாதை ‘ யினை எடுத்தால், ஒரு கட்டிடத்தின் உச்சியில் மையமாக ஒரு கொடுமுடி வைக்கப்படுவதன்முலம் இது அடையாளப்படுத்தப்படலாம்.


ஒரு சக்கரமும், அதன் மையமூடாகச் செல்லும் அச்சும், நடுவுப்பாதையை அடையாளப்படுத்தமுடியும்.
ஆகவே, வட்டக் குறுக்கு வெட்டினையுடையதும், அடியில் பெரிய விட்டத்தினைக் கொண்டும், மேலே செல்லச் செல்ல குறுக்கு வெட்டுக் குறைந்து சென்று, உச்சியில் ஒரு கொடு முடியை வைப்பதூடாகவும் நடுவுப்பாதையானது ஒரு கட்டிடமூடாக அடையாளப்படுத்தப்படமுடியும். இந்த நிலையில் இந்தக் கட்டிடமானது அரைக்கோள வடிவிலும், வேறு சிறு மாற்றங்களை உடைய வட்டக் குறுக்கு வெட்டினை உடைய வடிவிலும் அமைக்கமுடியும்.


இலங்கையிலும், இந்தியாவிலும், பௌத்த தூபிகள் இப்படியாகவே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன!
நான்கு பெரும் உண்மைகளை கட்டிடத்தின் அடிப்பகுதியை சதுர வடிவிலோ, அல்லது நீள் சதுர வடிவிலோ அமைப்பதூடாக, கட்டிடத்தையே இந்த வடிவுகளில் அமைப்பதூடாகவும் செய்து கொள்ள முடியும்.
இதை நான்கு வாயில்கள் உடைய கட்டிடமாகவும் அமைப்பதூடாகச் செய்யமுடியும்.
எண் குணங்களை, எட்டுச் சமனான பக்கங்களையுடைய எண்கோணியுடான கட்டிடமூடாக வடிவமைக்கமுடியும்.


கண்டியிலுள்ள தலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்ததாது வைக்கப்பட்டுள்ள கட்டிடமானது இந்த வடிவில்தான் அமைக்கப்பட்டுள்ளது.


எண்குணங்களைக் கடைப்பிடிக்கும் மூன்று படிகளை, கட்டிடமும் கூரைகளும் மூன்று படிகளாக இருக்கும் விதத்தில் கட்டிடத்தினை அமைத்து, உச்சி நிலை அடைவதை அடையாளப்படுத்தமுடியும். இதனுடன் நடுவுப்பாதையையும் இணைப்பதாயிக், உச்சியின் மையத்தில் ஒரு கொடுமுடியையும் வைக்கமுடியும். 
12 நிதானங்களை, கட்டிடத்தில் 12 தூண்கள் சமச்சீராக வைப்பதன்மூலமும், வேறு விதங்களிலும் செய்யமுடியும்.
இப்படி, பௌத்த போதனையினை எப்படி எப்படித்திறம்பட கட்டிடங்களில் அடையாளப்படுத்தி கட்டிடங்களை கட்டுவதில்தான் ஒரு கட்டிடக் கலைஞனின் திறனைக் காணமுடியும்.


3. சைவம் வைணவம் என்பவைகள் உண்மையில் திருத்தப்பட்ட மஹயாண பௌத்தமே.

இவற்றுள் சைவம் என்பது perfected ம்ாயாண பௌத்தமாகும். சிவன், விநாயகன், முருகன் என்பவைகள் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.


இதனை இந்தக் கடவுள்கள் எவைகளுடன்
அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்பதை விஞ்ஞான ரீதியாக ஆராய்வதன் மூலமும், தமிழ் இலக்கியங்கள் ஊடாகவும், தொல்பொருட்களுடாகவும் உறுதிப்படுத்த முடியும்.
இந்தநிலையில், மஹாயாண பௌத்தக் கட்டிடக் கலையில் பௌத்தம் வலியுறுத்துகின்றவைகள் நிலைக்குத்தாக கட்டிடக்கலையில் பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில், சைவம், வைணவம் என்பவைகளில் அவை கிடையாகக் கட்டிடக்கலையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. 


சைவ, வைணவக் போயில்கள் கிடையாக நீளப்பாட்டில் அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கவும்.
கிறீஸ்தவ கட்டிடக்கலையினை நாம் ஐரோப்பிய கட்டிடக் கலை என்றே கூறவேண்டும். 


இங்கு விடயங்கள் சுருக்கமாகத்தான் பார்க்கப்பட்டுள்ளன. இவைகளை அடிப்படையாக வைத்து ஒருவர் மேலதிக விளக்கங்களைத் தானாக ஏற்படுத்தி, இலங்கை இந்திய கட்டிடக்கலை தொடர்பாக விஞ்ஞான ரீதியிலான, சரியான விளக்கங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

No comments:

Post a Comment