Sunday, May 5, 2013

யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியத்தில் கட்டடம் பற்றிய எண்ணக்கரு


சமூக அறிவு
தொகுதி -1 ஆடி - 2004 இதழ் - 1, 2
கார்த்திகேசு சிவத்தம்பி


ஈழத் தமிழ்ச் சமூகத்திக் பல்வேறுபட்ட தனித்துவ அம்சங்கள் போன்றே, அதன் கட்டட நிர்மாணமும் இதர சமூகங்களுக்கில்லாத சில தனித்துவ இயல்புகளைக்கொண்டதொன்றாகும். இத்தகைய இயல்புகளைக் முன்கொணரும் ஒரு முன்னோடி முயற்சியாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. இம்முயற்சியின் சிறப்புக்களமாக யாழ்ப்பாணச் சமூகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பினைத் தொடர்ந்து கட்டடங்களை வசிப்பிடம் சார்ந்தவை, கோயில் சார்ந்தவை, பொதுநிலை சார்ந்தவை என்று பாகுபடுத்தி அவற்றின் தன்மைகளை கட்டுரை ஆராய்கிறது. உரியவிடத்து வரைபடங்கள் கொண்டு விளக்கங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணச் சமூகம்

இவ்விடயம் பற்றிய எடுத்துரைப்பினை தொடங்குவதற்கு முன்னர், யாழ்ப்பாணச் சமூகப் பாரம்பரியம் என எதனைச் சுட்டுகிறேன் என்பது முக்கியமானதாகும்.

யாழ்ப்பாணத்துப் பாரம்பரியச் சமூகம் என்பது 'சமூகப் பாரம்பரியம்' எனக் குறிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. யாழ்ப்பாணத்துக்குரிய சமூக ஒழுங்கமைவு முற்றிலும் பிராமணிய முறை சாராதது. ஆதலால், சாதி மேன்மை, சாதி ஆதிக்கம் என்பன கிராமத்துக்கு கிராமம், பெரும் பாகங்களுக்குப் பெரும் பாகம் (division) வித்தியாசமாயிருப்பது உண்டு.



மேற்சாதியனெப் பொதுவாகக் கொள்ளப்படும் வெள்ளாளர்களிடையேயும் அந்தஸ்து வேறுபாடு உண்டு. தமிழகத்திலுள்ளது போல வெள்ளாளக் குழுமங்கள் பற்றிய வரையறை இங்கு கிடையாது. இதனைவிட, ஏறத்தாள 1620 முதல், அதாவது போத்துக்கேய ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணம் வந்ததின் பின், வெள்ளாளர் அல்லாத சாதியினரும் சில இடங்களில் மேலோங்கிகளாகக் கிழம்பியிருந்தனர் (உதாரணம்: கரையார்) இதனைவிட பாரம்பரியச் சமூகக்கடமைகள் நடவடிக்கைகளில்ருந்து தம்மை விடுவித்துக்கொண்ட சாதிக்குழுக்களும் உண்டு. (உதாரணம்: இட்டம் போன கோவியர்) மேலும், முன்னர் வெள்ளாளராகக் கருதப்படாத சிற்சில வட்டாரக்குழுக்கள் (இவர்கள் மற்றச் சாதிகளுக்கு உரியதான தொழில்கள் எததையும் செய்யாதவர்கள் மாத்திரமே) கால ஓட்டத்திற் பொருளாதார முன்னேற்றங்கள் காரணமாகவும் அந்தஸ்து உயர்ச்சி காரணமாகவும் வெள்ளாளராகக் கருதப்பட்டு வெள்ளாங் குடிகட்குரிய நியமங்களைப் போற்றத் தொடங்கியிருந்தனர்.


இத்தகைய நெகிழ்ச்;சிகள், மாற்றங்கள்; ஆகியன வீடு போன்ற வாழ்நிலை வசதிகளில் நன்கு தெரிய வருவது இயல்பே. இவை யாவற்றிற்கும் மேலாகக் கிறிஸ்தவத்தின் வருகையும், குறிப்பாகப் புரட்டஸ்தாந்தியத்தின் வருகையும், அது வழங்கிய படிப்புக் (கல்வி) காரணமாக ஏற்பட்ட தொழில் மாற்றங்களை ஏற்படுத்தின. ஆயினும், இத்தகைய நெகிழ்ச்சிகள், மாற்றங்களினூடே சராசரியான சமூக நடைமுறை நியமப்பொதுத்தன்மை ஒன்று மாட்டடப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அந்தப் பொதுப்படையான சமூகப் பாரம்பரிய நியமங்களைக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்நிலை அம்சங்களின், பௌதிகப் பண்பாட்டின் (Material Culture) வரலாறு பற்றிய ஆய்வுகள் இல்லையென்று சொல்லும் அளவிற்கே உள்ளன. இந்த வாழ்நிலை அம்சங்களைப் பற்றிய நோக்கு எமது வரலாறு எழுதுகையில் (Historiography) இன்னும் இடம் பெறவில்லை. அதனால், சமூக நிலை கட்டட அமைவுகள் பற்றி எழுதுவதற்கான முன் ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலும் வடமராட்சியைத் தளமாகக் கொண்டு தீவுப் பகுதி தவிர்ந்த மற்றைய யாழ்ப்பாணத்துப் பிரதேசங்கள் பற்pறய ஓரளவு பரிச்சயத்துடள் இக்கட்டுரையில் வரும் தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

'Architecture’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'கட்டடம், கட்டடக்கலை' என்பதே வழங்கு சொற்களாகும். 'கட்டடம்' என்பதே உரிய சொல் என்பதும் 'கட்டிடம்' என்ற வழக்கும் உள்ளது என்பது லெக்ஸிகன் வழியாகத் தெரய வருகிறது. யாழ்ப்பாண வழக்கிற் 'கட்டிடம்' என்பதே உள்ளது. ஆனால், மக்கள் நிலையில் பெரிய, பாரிய கட்டிடங்களைக் (buildings) குறிக்குமே தவிர வீடு, கொட்டில், குடில் போன்றவற்றைக் குறிப்பதில்லை எனக் கொள்ளலாம். பொதுவாகக் கட்டப்படும்  வீடுகள் கூட அளவுகுப் பெரிதாக இருக்கக் கூடாது என்ற ஒரு கிராம நிலை நியமம் உண்டு. 'இடம் பட வீடேல்' என்ற மூதுரை யாழ்ப்பாணத்திற் பெருவழக்கிலுள்;ளது. அத்தகைய வீடுகள் 'வாழாது' என்கின்ற ஒரு நம்பிக்கையுண்டு. அயலிலுள்ள வீட்டின் குறுக்கு வளை உயரத்துக்கு மேல் ஒரு வீடு இருக்குமாயின் அது அந்த அயல் வீட்டுக்கே கூடாது என்ற நம்பிக்கையுமிருந்தது.

ஆயினும், அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்த்pற் கட்டட வேலைகளில் ஈடுபடும் நாட்கூலிக்காரர்களைக் 'கட்டுவேலைக்காரர்கள்' என்று கூறும் வழக்கு உண்டு. கட்டுவேலைக்காரர்கள் தனியார் கட்டட வேலைகளிலும் பொதுக் கட்டட வேலைகளிலும் (பாடசாலைகள், அலுவலகங்கள் போன்ற பொதுக் கட்டடங்கள்) ஈடுபடுவர். இத்தகைய கட்டுவேலைகளில் தொழில் திறனுள்ள வேலையாட்களும் (மேசன்) உடல் உழைப்பை மாத்திரமே வழங்;குபவர்களுமிருப்பர். உடலுழைப்பை வழங்கும் தொழிலாளியை முட்டாள் ஃ முட்டாள் வேலை என்று கூறும் யாழ்ப்பாண மரபும் உண்டு.

கட்டுவேலை என்பது இன்று தனியார் (Private) கட்டடங்களையும் பொதுக் (Public) கட்டடங்களையும் குறிக்கும் கோயிற் கட்டட வேலை தனியானதாகவே கருதப்படும். இந்தக் கட்டுவேலை மரபு ஏறத்தாழ 1960 களிலிருந்தே வழக்கிலுள்ளது. அதற்கு முன்னர் அவ்வாறு கட்டும் மரபு காணப்படவில்லை. பொது விடயங்களுக்கான கட்டடங்களைக் கட்டும் மரபு  மேல் நாடடார் வருகையுடனே வருகிறது (அலுவலகங்கள், பாடசாலைகள், மட்பாண்டங்கள் ஆகியன). கல்லும் சுண்ணாம்பும் பயன்படுத்தி ஓட்டால் வேயப்படும் கட்டட மரபு ஒல்லாந்தர் காலத்தில்pருந்தே யாழ்ப்பாணத்;தில் வழக்கிற்கு வந்ததன்று கொள்வர்.


வசிப்பிட கட்டங்கள்

யாழ்ப்பாணச்சமூக நிலையில் வசிப்பிடத்திற்கான வீடு கடடப் பெறுதல் முக்கியமானதொன்றாகும். இந்த வீடுகள்சமூக ஆதிக்க அந்தஸ்து நிலைகளுக்கேற்க வேறுபடும். யாழ் சமூக நிலைகளில் வசதியடைந்தவர்களே கல் வீடுகளைக்கட்டுவார்கள். கல்வீடு என்பது கல்லால் கட்டப்படும் வீட்டையே கருதும்.. இப்பொழுது கல்வீடுகள்பெரும்பாலும் சீமெந்துக்கல் அரிந்து அந்த அரிகற்களால்  கட்டப்படுவனவாக இருக்க, அதற்கு முன்னர் 1920களிலும் 30கள், 40களில் ஒருசிறு கிராமத்pல் 2-3கல்வீடுகள் இருப்பது கூட மிகக்குறைவாகவே இருந்தது. அக்காலத்தில் ஒருவர் பணக்காரர் என்பதைக்குறிக்க 'கல்வீட்டார்' என்று கூறும் மரபு இருந்தது. சமூக அதிகாரமும் கொருளாதார வசதியும் படைத்தவர்களினாலேயே தனியாருக்கு சொந்தமான கல்வீடுகள் கட்டப்பட்டன. இது மேலிருந்து கீழாகப் படிப்படியான பரமபுகையைப்பெற்றது. கல்வீட்டின் வருகையோடு யாழ்ப்பாண வீடு கட்டும் மரபில் ஒரு கணிசமான மாற்றம் ஏற்பட்டது எனலாம். அந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள அதற்கு முந்திய காலங்களில் தனியாக தனியார் வீடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதை அறிதல்.

வீடு கட்டப்படும் நிலையில் வீடு என்பதிலும் பார்க்க மனை என்ற சொல்லே பெருவழக்கில் இருந்தது. தென்னாசிய சமூகத்தின் பொதுவான இயல்புக்கிணங்க இந்த மனை கட்டுதல் மத சம்பிரதாயங்களுடன் சம்பந்தப்பட்டதாகக், குறிப்பாக சோதிடத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கொள்ளப்படும். இக்காலத்தில் இதனைக்குறிப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் என்ற பொதுப்பெயரைக்குறிப்பிடும் வழக்கம் வந்துவிட்டது. எனினும், யாழ்ப்பாண மரபில் பாரம்பரிய மனையடிசாஸ்திரம் என்றே சொல்லப்படும். யாழ்ப்பாணப் பண்பாட்டின் கையேடாகவுள்ள வாக்கிய பஞ்சாங்க மரபில் இது 'வீட்டுக்கு நிலை வகுத்தல்;' என்ற தலைப்பில் தரப்படுகின்றது. பொதுவாக இது பற்றிய அறிவை 'மனையடி சாஸ்திரம்;' என்றே கூறுவர். இன்றும் வீடுகள் பற்றிக் குறிப்பிடும் போது அது இன்ன லக்கினத்திற்கேற்ப மனை என்று குறிப்பிடும் மரபுண்டு. மேலாக மனைப் பொருத்தம் என்கின்ற ஒரு விசேட அம்சமும் உண்டு. ஒவ்வொரு வருடங்களுக்குரிய சுபமுகூர்த்தங்கள் பற்றிய விபரங்களைத் தரும்போது பஞ்சாங்கங்கள் வீடு கட்டல், குடிபுகல் ஆகியவற்றை ஒரு தனி விடயமாகக் கொள்வதைக்காணலாம்.

இவ்விடயத்தில் நிலம், காணி, வளவு என்ற சொற் பிரயோகங்களின் வேறுபாட்டையும் அறிந்திருத்தல் நல்லது. 'நிலம்;' என்பது எல்லா நிலத்தையும், குறிப்பாக அளக்கப்படாத நிலத்தைக் கருதும். 'காணி;;' என்பது அளந்து வரையறுக்கப்பட்டு உடைமையாகவுள்ள நிலமாகும். காணமம் என்பது நில அளவைக்கருவியின் பெயர். 'வளவு;;' என்பது மனைகள் உள்ள காணியைக்குறிக்கும்.

தமிழ்மரபில் வீட்டுக்கான சொல் மனை என்பதேயாகும். '“Palace”   எனப்படும் 'மாளிகை என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அரண்மனை என்ற சொற்றொடருடன் 'மனை' என்றசொல் கொண்டுள்ள பொருட் கருத்து ரீதியான தொடர்பினை விளங்கிக்  கொள்ளல் வேண்டும். 'அரண்மனை' என்பது அரண் செய்யப்பட்ட மனையேயாகும். அந்த மனையின் முக்கியத்துவம் மனை பற்றிய குறிப்பிலும் பார்க்க  அரண் செய்யப்பபட்ட தன்மையையே விதந்து கூறுகின்றது என்பதை மனங்கொள்ளல் வேண்டும். இதனால் பண்டைய அரசர்களின் வீடுகள் கூட, அடிப்படையில் மனைகளாகNவு இருந்தன என்பது தெரிய வரும். இதனாலே தான் போலும் அரச இல்லங்களுக்கான அழிபாடுகள் நம்மிடத்து இன்றில்லை.

கல்வீட்டுப்பண்பாடு வருவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் வீடு கட்டும் மரபு எவ்வாறு அமைந்தது என்று நோக்குவோம். 'வீடு' என்பது அந்நிலையில் தனியொர கடடுமானமாக இல்லாமல் ஒரு வளவுக்குள்ளிருந்த கட்டடத்தொகுதியாகவே பார்க்கப்படல் வேண்டும். வசதி படைத்த வெள்ளாள நிலையிற் குறைந்த பட்டசம் அது.

வீடு
கூடம்
அடுக்களை / அடுப்படி
மாட்டுக்கொட்டில்
கிணறு 

ஆகியவற்றைக் கொண்டதொன்றாக இருக்கும்.

யாழ்ப்பாண மரபுப்படி ஒரு வீட்டுக்குட் 'புகுதல்' என்பது கதவைத்திறந்து அந்த வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைப்பதென்பதல்லஅ அந்த விடு இருக்கும் வளவுக்குள்ளே செல்லுதலே வீட்டுக்குட் செல்லுதல் ஆகும். படலையைத்திறந்து  உள்ளே சென்று விடுவதே வீட்டுக்குட் செல்லுவதாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்தின் சாதி நியமங்களின் படி துடக்கினை ஏற்படுத்துபவர்கள் எவரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. 'துடக்கு' என்பது பிதாவழி உறவினர் மரணம் காரணமாகவும், பெண்களைப் பொறுத்தவரையில் மாவிடாய் காலம், பெரிய பெண்ணாகும் காலம் என்பவற்றிலும்  ஏற்படுவதொன்றாகும்.  இந்தப்பொது நிலைத் துடக்கினைவிடச் சாதி நிலையாகவும் துடக்கு ஏற்படலாம். வெள்ளாள வளவுக்குள் கோவியர், வண்ணார் செலலுவதில் துடக்கு இல்லை. மற்றையோர் சென்றால் துடக்கு உண்டு.

இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் மேநிலைப்படுத்தப்பட்ட குடிகளிடையே வீட்டு வீட்டு வளவுக்குள் நுழையும் படலையடியிலே 'படலைக் கொட்டில்' என ஒரு கொட்டிலைப்போட்டு, அதற்கப்பால் தரமறிந்து உட்செல்ல விடப்படுதல் வளக்கமாகும். இதனாற் படலைக் கொட்டிலில் திண்ணை இருப்பது வழக்கம். இத்திண்ணை, வேலிக்கு வெளியேயும் உள்ளேயுமிருக்கும்.

வளவுக்;குள் உள்ள பிரதான கட்டடம் வீடாகும். இந்த வீட்டினை தாய்மனை என்றும் சொல்வர். இது மனையடி சாஸ்திர நியமங்களுக்கேற்ப கட்டப்பட்ட தாய் இயைபான திசையில் வாயிலைக் கொண்டிருக்கும். வீட்டுக்குள் சுவரில் விளக்கு வைப்பதற்கான மாடம் இருக்கும். முக்கிய பொருட்கள் பெட்டகங்களுக்குள் வைக்கப்படும். பெட்டகங்கள் இல்லாத வீடுகளிற் கட்டுப்பெட்டிகள் இருக்கும். பெட்டகங்கள், கட்டுப்பெட்டிகள் என்பவற்றுக்குள்ளேயே துணிமணிகள், நகைகள் ஆகியன வைக்கப்படும். அலுமாரி, றங்குப்பெட்டி  போன்றவை பிற்காலத்தனவே.

அண்மையில் விவாகமானவர்களைத் தவிர மற்றையோர் வீட்டுக்குட் படுப்பதில்லை. வீட்டோடு சேர்ந்து கூடம் இருக்கும். கூடத்திலேயே பொதுவான புழக்கம் நடைபெறும். சில வீடுகளில் கூடம் தனியொரு கட்டடமாகவிருக்கும். வீட்டு வாசலுக்கு இரு புறத்தேயும் திண்ணைகளிருப்பது பெருவழக்கு.

அடுக்களை ஒரு தனிக்கட்டடமாக இருக்கும். இதன் அமைப்பு மனையடி சாஸ்திரப்படி வீட்டுக:கு இணைந்ததாக இருத்தல் வேண்டும். அடுக்களையை அடுப்படி என்று சொல்லும் மரபும் உண்டு. அடுப்படிக்குள் அடுப்புக்கான இடம் களிமண்ணாற் செய்யப்பட்டிருக்கும். ஏறத்தாழ அடுப்புக்கு மேலே பரண் இருக்கும். அடுப்புக்குள் தீய (தூய) சமையலுக்கான சட்டி, பானைகளே இருக்கும். மச்சச்சட்டி, இறைச்சிச்சட்டி அடுப்படிக்கு வெளியே தாழ்வாரத்தில் அல்லது அதற்கென உரிய கொட்டிலில் இருக்கும். அம்மி, குழவி,ஆட்டுக்கல் என்பன பெரும்பாலும் வெளித்திண்ணையிலேயே இருக்கும். உணவு உண்பது எடுக்களைக்குள் நடைபெறுவதில்லை. அடுக்களைத்திண்iணியிலிருந்தே பெரும்பாலும் உணவு உட்கொள்ளுவத வழக்கம். நல்ல நாள் பெருநாளிற் கூடத்தில் வைத்து உண்பர்.

இவற்றைத்;தவிர ஆடு, மாடுகளுக்கான கொட்டில் தனியே இருக்கும். கிணறு பெரும்பாலும் வீட்டுக்கு வடமேந்கு மூலையில் அல்லது தென்கிழக்கு மூலையில் இருக்கும்.

இவற்றை விட வெள்ளாள வீடுகளில் மாடுகளுக்கன வைக்ககோற் போரும் சில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமான வளவுக்குள் அதிக பழக்கமில்லாத ஒரு மூலையில் காளி,வைரவரி போன்ற தெய்வங்களுக்கான வழிபாட்டிடம் இருக:கும் . அது பெரும்பாலும் மர வணக்கமாகவே இருக்கும். மரத்திற் காளி அல்லது வைரவர் இருப்பதாக ஐதீகம்.

மேற்கூறிய ஒரு சராசரி உயரநிலைப்பட்ட விவசாய வளமுள்ள வெள்ளாளக் குடும்பத்தினது வீடு வளவாகும். ஆனால், கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் இத்துணை வசதிகளுடன் இருப்பதில்லை. மற்றையோரை பெரும்பாலும் இரண்டு நிலைப்படுத்தியே பார்க்கலாம்.

1. தாழ்;நிலச் சாதிகளாகக் கருதப்பட்டவர்கள்
கரையார், தட்டரர், தச்சர், கோவியர் போன்றோர்

2. தாழ்நிலைச் சாதிகளாகக் கருதப்பட்டவர்கள்

கிhம அமைப்பிற் பெரும்பாலும் ஒவவொரு சாதிக்ழுமங்களும் கிராம்த்pன் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் (பகுதியினர் என்ற சொல் இரண்டு கருத்துக்களை உடையது)

(அ) ஒரு பெரும் சாதிக்கும் வரும் ஒரு வழ்ச வழியினர் (Lineage)
(ஆ) கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் (Area) வாழ்பவர்கள்

கால ஓட்டத்தில் (அ) பிரிவினர் பரந்து வாழத் தொடங்கினர். மிக அண்மைக்காலத்தில் (ஆ) பிரிவினர் குழுமங்களாகவே வாழ்ந்தனர்.

 (அ) பிரிவினரின் வீடுகள் வீடு, கூடம், அடுக்களை என்பவற்றை விட வேலைக்கேற்ப பட்டறைக்கான கூடம் ஒன்றைக் கொண்டதாகவிருக்கும். பலர் இருந்து வேலை செய்வதற்கான இடமாக 'மால்' என்னும் கட்டட அமைப்பு விளங்கியது. (அ) நிலையில் கூடங்களிலும் பார்க்க மால்களே அதிகம இருந்தனவென்று கூறலாம். இந்தநிலையிலும் அடுக்களை தனியாகவே இருக்கும். எல்லா வீடுகளிலும் கிணறுகள் இருப்பதில்லை. ஒரு பொதுக்கிணறே இருக்கும். வசதியுள்ளவர்கள் தங்கள் வீடுகளில் கிணறு கிண்டியிருப்பர்.

(ஆ) நிலையினர் வீடு பெரும்பாலும் கொட்டில்களாகவே இருக்கும். மிக அண்மைக்காலம் வரை பெரும்பான்மையோர் சொந்த நிலமற்றவர்களாகவே இருந்தனர். அத்தகையோர் பெரும்பாலும் அப்பகுதி வெள்ளாளர்களுக்குரிய நிலத்தில் (காணியில்) கொட்டில்கள் அமைத்து வாழ்ந்தனர். கொட்டில்கள் அவரவர்கள் வசதிகளுக்கேற்ப சிறியதாகவும் பெரியதாகவும் இருக்கும். இந்த நிலையிலும் கூட அடுப்படி தனியானதொகவே இருக்கும். ஆனால், மிகச் சிறியதாகவே இருக்கும். கொட்டில்கள் பெரும்பாலும் பின்வரும் அமைப்பிலிருந்தன.


இதுவரை கூறிய சராசரி அமைப்புக்களை விட யாழ்ப்பாணத்தில் உயர் நிலைப்படுத்தப்பட்டோரின் இல்லங்களிற் சில, 'நாற்சாரம் வீடு' என்கின்ற அமைப்பில் இருந்தன. நாற்சாரம் வீடு என்பதைப் பின்வரும் முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாக்கு புறத்திலும் சாரினைக் (தாழ்வாரம்) கொண்ட வீடாகும். Inner veranda, under sloping roof surrounding the inner courtyard of a house, தாழ்வாரம் எனத் தமிழ் லெக்ஸிகன் கருத்துத்தரும்.

(இதன வகை மாதி;ரிக்கான ஒரு படம் இணைக்கப்பட்டுள்ளது)

யாழ்ப்பாணத்து நாற்சாரம் வீடும் ஒரு தலைமுறைக்கு மேல் கூட்டுக்குடும்ப வசிப்பிடமாக இருந்ததற்குச் சான்றுகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இப்போதுள்ள நாற்சாரம் வீடு என்ற அமைப்புக்கள்  கல்வீடுகளாகவே உள்ளன. இணைப்பில் தரப்பட்டுள்ள படத்துக்குரிய வீடு, அக்குடும்பத்தின் வரலாற்றை நோக்கும் போது ஏறத்தாள 19ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தி;ல் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.

(இந்த நாற்சாரம் வீடும்அமைப்புக்கும் கேரளத்திலுள்ள தரவாட் அமைப்புக்கும் உள்ள ஒற்றுமைகளை நோக்குதல் வேண்டும். கேரளத்தில் இது தாய்வழிச் சமூக அமைப்போடு சம்பந்தப்பட்டது. யாழ்ப்பாணத்து தேச வழமை ஒழுங்குக்குள்ளும் கேரளத்து மருமக்கள் தாய முறைமைக்குமுள்ள ஒப:புமைகளையும் நோக்கல் வேண்டும்)

மேனாட்டார் தொடர்க்கு முன்னருள்ள வீடுகள் களிமண்சுவர்களைக் கொண்டனவாகவும், பெரும்பாலும் பனைNhலையினால் வேயப்பட்டனவாகவும் இருந்தன எனக் கொள்ள இடமுண்டு. தென்னங் கிடுகும் வேய்வதற்குப்பயன்படும் ஒன்றாகும். நிலம் களி மண்ணால் பதனப்படுத்தப்பட்டு எடுக்கப்படும். (அதற்கென ஒரு மரத்திலான தட்டுக்கருவி இருந்தது). வீடுகள் சாணியினால் மெழுகப்படும். சுவர்கள் சிவந்த களிமண்ணினால் மெழுகப்பட்டிருக்கும். நல்;ல நாள் பெருநாளின் போதும் குடும்ப மங்கள வைபவங்களின் போதும் களிமண் மெழுகலுக்கு மேலே வெள்ளைச் சுண்ணாம்புப்புள்ளி புள்ளிகளாக இடப்படும். வீட்டு வாசலில்.லட்சுமிகரத்துக்காக ஒரு சங்கு அதன் மேற்புறம் தெரியும் வகையில் புதைக்கப்பட்டிருக்கும். நியமமான யாழ்ப்பாண மரபில் மார்கழிக்காலம் தவிர மற்றைய காலங்களில் கோலம் போடும் வழக்கம் இருந்ததாகச் சொல்ல முடியாது. இந்த அமைப்புக்களை விட வீடுகளிலும் பொது இடங்களிலும் விசேட வைபவங்களின் போது பந்தல் போடும் மரபும் இருந்தது. குறிப்பாக திருமண வைபவங்களின் போது பந்தல் கட்டுவது வழக்கம். பந்தல் பெரும்பாலும் தட்டையானதாகக் கிடுகால் வேயப்பட்டிருக்கும். மழைக் காலங்களில் முகடு வைத:து இரணடு அகண்ட சாராக அமைப்பர்.

யாழ்ப்பாணத்திற் கல்லால் வீடு கடடும் முறைமை ஒல்லாந்தர் காலத்திலேயே தொடங்கியது என்பர். இதனை ஒரு வரலாற்று உண்மையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றும் பாரம்பரிய டச்சுப் பிரதேசம் ஒன்றின் வீட்டின் அமைப்பே யாழ்ப்பாணத்து வீடுகளின் அமைப்பிற் காணப்படுகின்;றது. உணர்ந்த முகடும் தாழ்வாரத்தை நோக்கிச் சரிந்து செல்லும் சார்களை இருபக்கங்களிற் கொண்டதாகவிருக்கும். சுவர்கள் யாழ்ப்பாணத்திற் கிடைக்கும் சுண்ணாம்புக்கல்;லினாலும் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்படும். இக்கட்டடங்கள் ஓடுகளால் வேயப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் ஓடுகள் இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்பட்டதாக இருத்தல் வேண்டும். ஒல்லாந்தர் கேரளத்திலும் செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர். சீமெந்து எந்தக் காலத்தல் வந்ததென்பது தெரியளவில்லை. இப்போதுள்ள பழைய நாற்சாரும் வீடுகள் பலவற்றில் நிலத்திற்குச் சீமெந்து போடப்பட்டிருந்தாலும் சில இடங்கிளல் சில அறைகள் மெழுகிய தரைகளாகவே உள்ளன.

கோயிற் கட்டடங்கள்

அடுத்து யாழ்ப்பாணக் கட்டமைப்பில் முக்கியம் பெறுவது கோயில்கள்; ஆகும். யாழ்ப்பாணத்து  கோயில்களின் கட்ட அமைப்புப்பற்றி மிக நுண்ணியமாக விரிவாக ஆராயப்பட வேண்டியத அவசியமாகும். இக்கட்டுரையின் தேவைகளுக்காகச் சமூகப் பாரம்பரிய, கண்ணோட்ட நிலை நின்று கோயில்களின் அமைப்புப் பற்றி மிகச் சுருக்கமாக நோக்குவோம்.

யாழ்ப்பாணத்து இந்து மக்களிடையே வழிபாட்டிடங்கள் நான்கு நிலைப்பட்டனவாக உள்ளன என்பதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளேன் (Sri Lankan Tamil Society and Politics, Chennai - 1995)

முதல்  : வீட்டு வளவுக்குள் அல்லது அயலில் பெரும்பாலும் குளத்தங்கரை, பெரிய மரங்களுக்குள்ள ஒரு வழிபாட்டடிடம். இது காளி, வைரவர் அல்லது சாதிநிலைத் தெய்வங்களாக இருத்தல் (உதாரணம் : விறுமர், பெரிய தம்பிரான், அண்ணமார் ஆகியன)

இரண்டாவது  : கிராமத்துக்கான கோயில். இது பெரும்பாலும் பொங்கல் ஃ குளிர்;த்தி மகோற்சவங்கள் உள்ள கோயிலாகவே இருக்கும். ஒரு கிராத்துக்குச் சில வேளைகளில் இரண்டு மூன்று கோயில்கள் கூட இருக்கும். ஆனால், பெரும்பாலும் கிராப் பாகங்களுக்கு ஒவ்வொன்றாக இருக்கும்.

மூன்றாவது : அந்தப் பிரதேசத்தின் பெரிய கோயில்கள். உதாரணமாக வடமராட்சிக:கு வல்லிபுர ஆழ்வார், செல்வச் சந்நிதி


நான்காவது :இதற்கு மேலாக யாழ்ப்பாணம் முழுவதற்கும் பொதுவான கோயில். உதாரணமாக மாவிட்டபுரம், செல்வச் சந்நிதி, நல்லூர் என்பன. அண்மைக்காலத்தில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலும் முக்கியம் பெற்றுள்ளது.

இதில் முதல் நிலையில் கற்கட்டடம் அவசியமில்லை. ஆனால், இப்போது பெரும்பாலான வட்டாரக் கோயில்கள் சிறுகற் கட்டடங்களாக உள்ளன. மற்றைய மூன்று நிலைகளிலும் கற்கட்டடங்களே காணப்படுகின்றன. ஆனால், இந்தக் கட்டடங்களிலும் ஒரு வளர்ச்சி உள்ளதென்பதை மறந்த விடக்கூடாது. 1930களில் வெளிவந்த ஈழகேசரி ஆண்டு மலi; ஒன்றில் யாழ்ப்பாணத்துப் பிரபல பேகாயில்களின் புகைப்படங்கள் உள்ளன. நல்லூர் உட்பட எல்லாக் கோயில்களின் முகப்புக்களிலும் ஒல்லாந்தக் கடட அமைப்பின் சாயல்கள் காணப்பட்டன.(செல்வச் சந்நிதியில் இந்த முறைமை இன்னமும் காணப்படுகின்றது)

பெரும்பாலான கோயில்கள் இப்போது கோபுரங்களைக் கொண்டனவாக உள்ளன. யாழ்பாண அமைப்பின் பிரதான அம்சங்களில் ஒன்று மணிக்கெனத் தனிக்கோபுரம் இருப்பது தான். (தமிழகத்து கோயில் அமைப்பில கோயில் மணி இவ்வாறு அமைக்கப்படுவதில்லை). இதற்குக் காரணம் கிறிஸ்தவத்தேவாலதங்களிற் கோயில் மணிக்கென ஒரு தனிக் கட்டடம் இருப்பதாலாகும். அந்த மரபு கல்லாற் கோயில் கட்டத்  தொடங்கியதும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.

யாழ்பாண கோயில்களில் மூலஸ்தானக் கட்டடங்கள் பெரும்பாலும் சுண்ணாம்குப் பொழ் கல்லாலே கட்டப்பட்டிருந்தது. ஆனால் அக்கட்டம் கருங்கல்லாலே கட்டப்பட வேண்டும் என்பது ஒரு நியமம் ஆகும். இப்போது பெரும்பாலான கோயில்களில் மூலஸ்தானம் கருங்கல்லினாலேயே கட்டப்படுகின்றத. இப்போது கட்டப்படும் கோயில்கள் திராவிட சிற்ப முறையை அடியொற்றிக் கட்டப்படுகினற்து.

யாழ்ப்பாணத்தலுள்ள கிறிஸ்தவத்தேவாலதங்களின் கட்டட அமைப்பு முக்கியமானது. போர்துக்கேயர் காலத்திலேயே கிறிஸ்தவத்தேவாலயங்கள் கல்லால் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். பெரும்பாலான யாழ்ப்பாணத்து தேவாலயங்கள் மேற்கத்தேய தேவாலய அமைப்பினக் கொண்டிருக்கின்றன. எனினும், அண்மைக்காலத்தற் கட்டட அமைப்பிற்கு அண்மித்தான வகையிற் சில தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. யாழ்ப்;பாணக் கோட்டைகு;குள் இருந்த தேவாலயம் ஆசியா முழுவதிலும் இருந்த டச்சுக் கடடட அமைப்புக் கோயில்களில் மிகச சிறந்த ஒன்றெனக் கருதப்பட்டது (இது இப்போது குண்டு வீச்சினால் அழிந்து விட்டது)


பொதுநிலைக் கடடடங்கள் 

யாழ்ப்பாணத்திற் பொதுநிலைக் கடடடங்களாக உள்ளவை பாடசாலைகள், நீதி மன்றங்கள், அரச அலுவலகங்கள், நூலகம், சனசமூக நிலையங்கள், பொதுச்சந்தைகள் ஆகியனவற்றுக்கான கட்டடங்கள் ஆகும். இவற்றிலும் ஏறத்தாழ 1950, 60வரையும் ஒரு பொதுப் பணியினைக் காணலாம். யாழ்ப்பாணப் பொதுநிலைக் கடடடங்களுளட மிக அழகானதாகவும் சிறப்பானதாகவும் அமைந்தது யாழ். நகரசபை மண்டபம் ஆகும் ( இப்போது அழிந்து போயுள்ளது). விக்டோறிய கடடட அமைப்பின் பல அம்சங்கள் அதிலே காணப்படடன. யாழ்ப்பாணத்துக் கச்சேரிக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. குறிப்பாக அரசாங்க அதிபரிக் இல்லமாவுள்ள கட்டடத்தின் அமைப்பு அக்காலத்து ஆங்pகல காலனித்துவ மரபை அடியொற்றியயதாகும். யாழ்ப்பாணத்தின் பொதுக் கட்டட அமைப்பிற்குள் மிகப் பிரசித்தி பெற்றவையாக இருந்தவை யாழ். நகர மண்டபம், யாழ் நூலகம், யாழ் புகையிரத நிலையம் ஆகியனவாகும்.

தனியார் வீடுகள் 

பண்பாட்டு மாற்றங்களும் பிற் நாகரக வருகைகளும் வாழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஓர் அடிப்படையான மானுடவியல் உண்மையாகும். இந்த உண்மையைக் கடந்த 50  வருட காலத்து யாழ்ப்பாணத்து தனியார் வீடுகளும் பொது நிலைக்  கட்டடங்களும் காட்டுகின்றன. இவை யாவற்றிலுமூடே யாழ்ப்பாணத்துக்கென ஒரு தனிக் கட்டட அமைப்புப் பாரம்பரியம் உள்ளதா என்பதைப பற்றி நோக்கும்போது அது பருவப் பெயர்ச்சிக் காற்று, மழை உள்ள பிரதேசங்களில் காணப்படும் பொதுவான அமைப்புக்குட்பட்டதாகவும் இப்பகுதியின் சமூக படிநிலை விகசிப்புக்களைச் சித்தரிப்பனவாகவும் அமைந்துள்ளத எனலாம். உண்மையில் வாசல் அமைப்புக்கும் பருவப் பெயர்ச்சிக் காற்று மழைக்கும் தொடர்புண்டு. அவ்வாறு ஆரம்பித்தது பின்னர் சாஸ்திரிய மயப் படுத்தப்பட்டிருக்கலாம்.

ஏற்கனவே கூறிய தாய்மனை. கூடும், மால், அடுக்களை என்ற அமைப்பு நவீனமயவாக்கத்துடன் சிறிய மாற்றங்களைப் பெற்றது எனலாம். கல்லால் வீடுகள் கட்டப்பட்ட பொழுது ஒல்லாந்தமைப்பில் முக்கிய இடம் பெறும் விறாந்தை (Veranda) முக்கிய இடம் பெற்றது. வீட்டின் முகப்பு வாசல் அறையை தலைவாசல் அறை எனவும், முக்கிய  பொருள் வைத்திருக்கும அறையை தாய் அறை எனக் கொள்ளும்மரபும் வந்தது. அத்துடன் தாய் அறைக:குள் சுவாமி படம் வைத்து கும்பிடும் மரபும் தொடங்கியிருத்தல் வேண்டும்.

கல்வீட கட்டி குடிபுகும் போது இன்றும் கூட தாய் அறைகு;குள்  சுவாமி படங்களை வீட்டுக்காரர் கொண்டு செல்வது மரபாகவுள்ளது. சிறிய வீடுகளில் தாய் அறையே படுக்கைக்கும் பயன்படுத்தப்பட்டது. எனினும், பொதுவாக அத்தகைய அறைக:குள் மாப்பிள்ளை பொம்பிளை தவிர எவரும் படுப்பதில்லை. படிப்படியாக படுக்கை அறைகள் தனியே கட்டப்படலாயின. நவீனமயவாக்கத்தின் ஒரு வெளிப்பாயாக வளவின் புற மூலையில் கக்கூஸ் கட்டப்படும் வழக்கமும் ஆரம்பி;த்தது.

இத்தகைய கல்வீடு  கட்டல் முறைமையில்  சீமெந்துக் கல்லிக் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சீமெந்துக் கற்களைமுதல் அரிந்து வைத்துவிட்டுப் பின்னர் அதிதிவாரத்தின் தேமல் வேண்டிய முறையில் கட்டிச் செல்வர்.

முதலில் கட்டப்பட்ட கல்வீடுகள் பெரும்பாலும் இத்தகையனவாக அமைய ஏறத்தாழ இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கட்டப்பட்;ட அமைப்பு முறையில் அமைப்பு மாற்றங்கள் ஏற்பட்டன. 1950களில் புதிய பசன் வீடுகள், அமெரிக்கன்  பசன் வீடுகள் வரத் தலைப்பட்டன. இவற்றினுடைய முக்கிய அம்சம் ஒரு அமைப்புக்குள்ளேயே குளியலறை, கழிப்பறை, குசினி (அடுக்களை) ஆகியன அத்தொகுதியினுள்  வந்துவிடும். குசினி அறையில் ஒரு புகைபோக்கி இருக்கும். இருப்பினும் மனையடி சாஸ்திர முறைப்படியே அந்த அந்த அறைகள் அந்த அந்த இடத்தில் கட்டப்பெற்றன.

யாழ்ப்பாண சாதி அமைப்பில் பிராமணியக் கட்டுப்பாடுகள் இல்லாததினால் வாய்ப்பு வசதிஜயள்ள குழுமங்கள் மேல்நிலையைக் கோருவதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அத்தகைய பணக்கார தாழ்நிலையல்லா குடும்பங்களும் பெரிய வீட்டைக்கட்டிக்கொண்டிருந்தன. நகரமயவாக்கம் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட போது சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதியினரும் தங்கள் தங்கள் நிலைகளுக்Nகுற்ப கல்வீடுகள் அமைக்கத் தொடங்கினர். இப்பண்பு பின்னர் நகரமயவாக்கம் பரவப்பரவ மற்றைய  இடங்களுக்கும் சென்றன. இவை கடடப் பெற்ற முறைமை பற்றிய ஆய்வில் அடிநிலை மக்களின் மனை அமைப்புக்கள் பற்;றிய தகவல்கள் எம்மிடத்தில் இல்லை. இவ்விடயம் விரிவயாக ஆராயப்படவேண்டியதாகும்.

மண்வீடுகளாகக் கட்டப் பெற்றவற்றுள்ளும் பல்வகை வேறுபாடுகளுள்ளன. அவற்றைப் பற்றிய பதிவுகளும் நம்மிடமில்லை.

நம்முடையபுனைகதை இலக்கியங்களும் கூட அடிநிலைமக்களின் வாழ்க்கை நிலையைக் காட்டுகின்ற போதுமான விபரிப்புகள் இல்லை என்றே கூற வேண்டும்.

எனினும், கே.வி. நடராசனினன் யாழ்ப்பாணத்துச் சிறுகதைகள் எனும ;தொகுதியில் வரும்  கமனியா வளவு எனும் வாழ்விடம் பற்றிய விபரிப்பு வறுமைப்பட்ட தாழ்மக்களின் மனை அமைப்புப் பற்றிய ஒரு மனப்பாடத்தினத் தருகின்றது.

கணேசலிங்கத்தின் சடங்கு நாவலில் உரும்பிராயைச்சேர்ந்த சராசரி வெள்ளாளக்கு குடும்பத்தின் வீட்டு மனப்பதிவு வருகின்றது.

1984 முதல் நடந்து வந்துள்ள யுத்தம் நமது பாரம்பரிய பேறுகள் பலவற்றை அழித்து விட்டது. எனினும் இந்த அழிவுகளினூடே புதிய ஆக்கத்துக்கான உத்வேகம் கிளம்பும்.

சமூக அறிவு
தொகுதி -1 ஆடி - 2004 இதழ் - 1, 2
கார்த்திகேசு சிவத்தம்பி

No comments:

Post a Comment